அவனியாபுரம் ஜல்லிக்கட்டு கோலாகல தொடக்கம் !!

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று உற்சாகத்துடன் துவங்கி வைக்கப்பட்டது.

மதுரை: மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று பொங்கல் திருநாளையொட்டி கோலாகலமாக நடந்தேறியது. இந்த ஜல்லிக்கட்டில் 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

அவர்களுக்கு உடனுக்குடன் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.

பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவது நம் வழக்கம். அதன்படி, மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் 3 இடங்களில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

பொங்கல் தினத்தன்று அவனியாபுரத்திலும், மாட்டுப் பொங்கலன்று பாலமேட்டிலும், காணும் பொங்கல் அன்று அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியது.

இந்த போட்டிக்காகவே கடந்த 15 நாட்களாக காளைகள், மாடு பிடி வீரர்கள் பதிவு, அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் போன்றவறை மிக தீவிரமாக நடைபெற்று வந்தது.

அதன்படி இன்று பொங்கல் தினத்தன்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி வெகுவிமரிசையாக தொடங்கியது.

மதுரை மாவட்ட ஆட்சியர் நடராஜன் கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தார். உயர்நீதிமன்ற உத்தரவின்படி ஒய்வு பெற்ற நீதிபதி ராகவன் கண்காணிப்பில் ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமரிசையாக நடைபெற்றது.

இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 691 காளைகள், 594 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.

ஒரு மணி நேரத்திற்கு ஒரு சுற்று என, முதல் சுற்று, இரண்டாம் சுற்று என சுற்றுக்கணக்கில் இந்த போட்டிகள் நடைபெற்றன.

வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வெளியேறிய காளைகளை அடைக்க வீரர்கள் படு உற்சாகத்துடன் முட்டி மோதினர்.

பலர் காளைகளை வெற்றிகொண்டனர், பலரை காளைகள் வெற்றிக்கொண்டன. 40 பேர் காயமடைந்தனர்.

தற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)

தொடர்புடையவை

Close
Close