சிறப்பு நீதிமன்றத்தில் ஸ்டாலின் இன்று ஆஜர் !

தமிழக அரசு கடந்த 2012-ம் ஆண்டு திமுக தலைவர் ஸ்டாலின் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தது. இதனை தொடர்ந்து சென்னை மாவட்ட ஆட்சியல் அலுவலக வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ஸ்டாலின் இன்று ஆஜரானார்.

2012-ம் ஆண்டு முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா மற்றும் தமிழக அரசு குறித்து அவதூறாக பேசியதாக ஸ்டாலின் மீது 7 அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன.

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வழக்குகளை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றியது. இரண்டு வாரத்திற்கு முன் இந்த வழக்கில் ஸ்டாலின் நேரடியாக ஆஜராக வேண்டும் எனவும் பின்னர் தான் வழக்கில் இருந்து ஆஜராக விலக்களிக்க முடியும் என நீதிபதி  கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து சிறப்பு நீதிமன்றத்தில் ஸ்டாலின் இன்று ஆஜரானார்.

நீதிமன்றம் வழக்கை விசாரித்த பின், அக்டோபர் 31-ந் தேதிக்கு விசாரணையை ஒத்தி வைத்தது.

ஸ்டாலின் நேரில் ஆஜரானதை தொடர்ந்து, நீதிமன்ற வளாகத்தில் ஏராளமான திமுக தொண்டர்கள் குவிந்தனர்.

தற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)

தொடர்புடையவை

Close
Close