மும்பையில் பெய்து வரும் கனமழை – முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று பொது விடுமுறை!

மராட்டிய மாநிலத்தில் தாமதமாக தொடங்கிய பருவமழையானது தற்போது தீவிரமடைந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய மழையானது இரவு முழுவதும் பெய்வதுடன் பகல் முழுவதும் தொடர்ந்து பெய்து கொண்டே உள்ளது.

இவ்வாறு இடைவிடாமல் பெய்து வரும் கனமழையால் பல்வேறு தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் மக்களின் இயல்பு நிலை பெரும் அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது. பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மிதப்பதால் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தெருக்களிலும் மழைவெள்ளம் தேங்கியுள்ளதால் வாகன போக்குவரத்து பெரும் அளவு பாதிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ரயில் சேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. மக்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மும்பையில் இன்று பொது விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. மும்பையில் இன்னும் 3 தினம் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய்யம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)

தொடர்புடையவை

Close
Close