காஷ்மீரில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 10 தொழிலாளர்கள் உயிரிழப்பு!

லடாக்கில் கர்துங் லா என்ற பகுதியில் உள்ள உலகிலேயே உயரமான சாலை என்ற பெருமை கொண்ட அந்த சாலை வழியாக 2 வாகனங்களில் 10 தொழிலாளர்கள் சென்றுகொண்டிருந்தனர். இதனிடையே திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. அதனால் அந்த வாகனத்தில் சென்ற தொழிலாளர்கள் அந்த பனிச்சரிவில் சிக்கி புதைந்தனர்.

இது பற்றி தகவல் அறிந்த மாநில பேரிடர் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். புதைந்துபோன அந்த தொழிலாளர்களை மீட்டபோது அவர்கள் பிணமாகத்தான் மீட்கப்பட்டனர்.இதை தொடர்ந்து அந்த சாலையை சீர்செய்யும் பணியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

தற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)

தொடர்புடையவை

Close
Close