100 ரூபாய் நாணயம் இன்று வெளியிடப்பட்டது – துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வெளியிட்டார்.

100 வருடத்திற்கு முன் அதாவது கடந்த 1919-ஆம் ஆண்டு ஏப்ரல் 13-ஆம் தேதி ரவுலத் சட்டத்தை எதிர்த்து பஞ்சாப் மாநிலம் அமிர்தரசில் ஏராளமானோர் தங்கள் எதிர்ப்பை அமைதியான முறையில் தெரிவித்தனர்.

ஆனால் இந்த போராட்டத்தை நிறுத்தும் வகையில்பிரிட்டிஷ் அரசாங்கம் அவர்களை கலைந்து செல்லுமாறு கேட்டுக்கொண்டது. ஆனால் அவர்கள் அங்கிருந்து கலையவில்லை.

மேலும் அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இந்த துப்பாக்கி சூட்டில் 100-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதன் நினைவுதினம் ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது.அந்த வகையில் இன்றைய தினம் 100-வைத்து ஆண்டு நினைவு தினமாகும்.

இந்த தினத்தை நினைவுபடுத்தும் வகையில் பஞ்சாபி மாநிலம் அமிர்தசரில் நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது.
இவ்வாறு நடத்தப்பட்ட நிகழ்ச்சியில்துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு கலந்துகொண்டு ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்து அதன் 100வது ஆண்டு நினைவாக 100 ரூபாய் நாணயத்தை வெளியிட்டார்.

தற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)

தொடர்புடையவை

Close
Close