சூடான் தொழிற்ச்சாலையில் தீ விபத்து 3 தமிழர்கள் உள்பட 18 இந்தியர்கள் பலி

சூடானின் தலைநகரான கார்தோமில் தொழிற்ச்சாலை ஒன்று அமைந்துள்ளது , அப்போது திடீரென கேஸ் நிரப்பப்பட்ட டேங்கர் லாரி ஒன்று தீப்பிடித்து வெடித்து சிதறியது.

 

வெடித்து சிதறிய இந்த தீயால் அந்த தொழிற்ச்சாலையும் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இவ்வாறு ஏற்பட்ட இந்த தீ விபத்தில்சிக்கி 23 உயிரிழந்துள்ளதாகவும் , 130 பேர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

பலர் மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் அஞ்சப்படுகிறது. உயிரிழந்த 23 நபர்களில் 18 பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள் என்றும், இதில் 3 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.

மேலும் இந்த விபத்திற்க்கான காரணம் குறித்தும் , அந்த தொழிற்ச்சாலையில் பாதுகாப்பு அம்சங்கள் முறையாக பின்பற்றபட்டிருக்கா என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ள அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)

தொடர்புடையவை

Close
Close