கனமழையால் மும்பையில் கட்டிடம் இடிந்து விபத்து – 18 பேர் பலி , 13 பேர் படுகாயம்.

மும்பையில் கடந்த 4 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. அதனால் மும்பை நகரமே வெள்ள காடாக காட்சியளிக்கிறது. இவ்வாறு தொடர்ந்து பெய்யும் கனமழையால் மும்பையின் கிழக்கு மலாட் பகுதியில் உள்ள பிம்ப்ரிபட என்ற இடத்தில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் இது வரை 18 உயிரிழந்துள்ளனர். 13 பேர் காயமடைந்துள்ளனர்.அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் 3 நாட்களுக்கு மழையானது நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

மும்பை விமானநிலையத்தில் தரையிறங்கிய விமானம் ஒன்று , ஓடுதல பாதையில் இருந்த தண்ணீரில் முழுகியதால் அந்த விமானத்தின் சக்கரங்கள் சேதமடைந்தன இதனால் அந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இத்தகைய ஆபத்துக்கள் ஏற்படாமல் இருக்க மும்பையில் 52 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)

தொடர்புடையவை

Close
Close