6 வயது சிறுமியின் மாத வருமானம் ரூ.21 கோடி!

தென் கொரியாவை சேர்ந்தவள் போரம் என்ற 6 வயது சிறுமி இவள் இந்த சிறு வயதிலேயே யூ-டியூப் சேனல்களை நடத்தி வருகிறாள். அதில் போராமின் முக்கிய பணி என்னவென்றால் குழந்தைகள் விளையாடும் பொம்மைகள் குறித்து பதிப்பாய்வு அதாவது (ரிவியூ) செய்வதுதானாம்.

போரமின் மழலை குரலில் பேசும் ரிவியூ வை கேட்க குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஒரு ரசிகர்கள் கூட்டமே உள்ளது. கிட்டத்தட்ட 3 கோடிக்கும் மேல் ரசிகர்களை கொண்டு யூடியூபில் ஒரு பிரபலமாக வளம் வருகிறாள் நம் போரம்.

இந்நிலையில் போராமின் யூடியூப் சேனல் மூலம் கிடைத்த வருவாயை வைத்து அவளது பெற்றோர் தலைநகர் சியோலில் ரூ.55 கோடியில் 5 மாடி வீடு ஒன்றை வாங்கி இருக்கிறார்களாம்.

இந்த விஷயம் அங்கிருக்கும் அனைவரிடத்திலும் பெரும் அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)

தொடர்புடையவை

Close
Close