மும்பையில் 3 கார்கள் அடுத்தடுத்து மோதல் – 8 பேர் காயம்

மகாராஷ்டிராவின் தலைநகரான மும்பையில் கடந்த சில வாரமாக பருவமழை பெய்து வருகிறது. அதனால் பல்வேறு இடங்களில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

இந்த மழை வெள்ளத்தால் சியான் ரெயில்வே நிலையத்தின் தண்டவாளங்கள் நீரில் மூழ்கியுள்ளன. அதனால் அந்த வழியே செல்லும் ரெயில் போக்குவரத்து பெரிதும் பாதிப்படைந்துள்ளது. எனவே அந்த தண்டவாளத்திலுருந்தது நீரை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

இதேபோல் சாலையிலும் வெள்ளம் சூழ்ந்ததால் போக்குவரத்து பெரிதும் பாதிப்படைந்துள்ளது.இந்நிலையில் கனமழையால் ஏற்பட்டுள்ள தெளிவற்ற வானிலையில் மும்பை அந்தேரி பகுதியில் இன்று காலை 3 கார்கள் அடுத்தடுத்து ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின.இந்த விபத்தில் 8 பேர் காயமடைந்துள்ளனர்.அவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

தற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)

தொடர்புடையவை

Close
Close