இறந்து போன பிச்சைக்காரர் பையில் 3 லட்சம் ரூபாய்!

ஆந்திர மாநிலம் அனந்தப்பூர் மாவட்டம் குஜ்நக்கல் என்ற பகுதியில் தர்கா ஒன்று அமைந்துள்ளது. இந்த தர்கா முன்பு பல்வேறு பிச்சைக்காரர்கள் அமர்ந்து பிட்சை எடுப்பது வழக்கம். இந்நிலையில் அந்த தர்கா முன்பு பஷீர் (வயது 75) என்பவரும் பிச்சை எடுத்து வந்தார்.தர்காவிற்கு வருபவர்கள் பசீருக்கு பணமாகவோ அல்லது உணவாகவோ கொடுத்து வந்துள்ளனர்.

இவ்வாறு பிட்சை எடுக்கும் சில்லறை காசுகளை இரவில் அங்குள்ள கடைக்காரரிடம் கொடுத்து ரூபாய் நோட்டுகளாக மாற்றி கொள்வார்.பின்னர் இரவில் அந்த தர்கா முன்பே படுத்து தூங்கிவிடுவார்.அப்படி இருக்கும் போது நேற்று முன்தினம் பஷீர் நீண்ட நேரமாகியும் எழுந்திருக்கவில்லை.அங்குள்ள மக்கள் அவர் தூங்கிக்கொண்டு இருப்பதாக நினைத்துக்கொண்டனர். ஆனால் அவர் மாலை வரை தூங்கிக்கொண்டே இருந்ததால் அப்பகுதி மக்கள் அவரை தட்டி எழுப்பிய போது அவர் இறந்து விட்டதை அறிந்தனர்.

உடனே பொதுமக்கள் இதைப்பற்றி அங்குள்ள போலீசாரிடம் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இறந்துபோன பஷீரின் பைகளில் அவரது உறவினரின் முகவரி எதாவது உள்ளதா என்று தேடி பார்த்தனர். எதுவும் கிடைக்கவில்லை.ஆனால் அந்த பைகளில் ஏராளமான ரூபாய் நோட்டுகள் இருந்தன. அது மொத்தம் 3 லட்சத்தி 22 ஆயிரம் இருந்தது.

12 ஆண்டுகளாக தர்கா முன்பு பிச்சை எடுத்து வந்த பஷீர் யாரிடமும் பேசமாட்டார்.அதனால் அவரது விவரம் பற்றி யாருக்கும் தெரியவில்லை.எனவே அவரது உடலை தர்கா நிர்வாகத்திடமே அடக்கம் செய்ய கொடுத்து விட்டு அந்த பணத்தையும் அவர்களிடமே கொடுத்து போலீசார் அவர்களது கடமையை முடித்தனர்.

தற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)

தொடர்புடையவை

Close
Close