மேலும் 3 அரசு சட்ட கல்லூரிகள் தமிழகத்தில் அமைக்கப்படும் – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

இன்று நடந்த சட்ட பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் விதி 110ன் அடிப்படையில் அறிவிப்புகளை வெளியிட்டார்; அதன் விவரங்கள் பின்வருமாறு;

* தமிழகத்தில் மொத்தமாக 13 அரசு சட்ட கல்லுரிகளும் , ஒரு தனியார் சட்ட கல்லுரியும் செயல்பட்டு கொண்டிருக்கும் நிலையில் மேலும் 3 அரசு சட்ட கல்லூரிகள் தமிழகத்தில் அமைக்கப்படும்.

* 5 ஆயிரம் கி.மீ தொலைவில் ஊரக சாலைகள் ரூ.1200 கோடி செலவில் மேம்படுத்தப்படும்.

* மகளிர்களால் நடத்தப்படும் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.12,500 கோடி ரூபாய் வழங்கப்படும்.

* தண்ணீரை சேமித்து பாசனத்திற்கு பயன்படுத்துவதற்க்கான முயற்சிக்கு ரூ.318 கோடியில் 10,000 தடுப்பு அணைகள் புதிதாக கட்டப்படும் என தெரிவித்துள்ளார்.

தற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)

தொடர்புடையவை

Close
Close