தீவிரவாதத்துடன் தொடர்புடைய 37 பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது – நிறைவேற்றியது சவுதி அரேபிய அரசு

சவுதி அரேபியா நாட்டில் தீவிரவாதத்திற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளும், பெரும் தண்டனைகளும் வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தீவிரவாதத்துடன் தொடர்புடையதாக கூறி அந்நாட்டை சேர்ந்த 37 நபர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பயங்கரவாத கொள்கைகளை தீவிரமுடன் பின்பற்றியதும், மக்களின் பாதுகாப்பினை சீர்குலைக்கவும் , குழப்பங்களை விளைவிப்பது போன்ற செயல்களை செய்ய பயன்படுத்தும் ஸ்லீப்பர் செல் என்று கூறப்டும் தீவிரவாத குழுக்களை உருவாக்கி செயல்படுத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதன் அடிப்படையில் அவர்கள் அனைவருக்கும் மரண தண்டனை வழங்குவதாக முடிவானது.

இந்நிலையில் , தீவிரவாதத்துடன் தொடர்புடைதாக கைதுசெய்யப்பட்ட 37 பேருக்கு வழங்கப்பட்ட அந்த மரண தண்டனை தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதாவது சவுதி அரேபிய அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)

தொடர்புடையவை

Close
Close