8 இருக்கை கொண்ட மஹிந்திரா மராஸ்ஸோ M8 மாடல் கார் வெளியானது!

8 இருக்கை பெற்ற மஹிந்திரா மராஸ்ஸோ M8 மாடல் கார் விற்பனைக்கு அறிமுகம் ஆகிறது.

மஹிந்திரா நிறுவனத்தின் மராஸ்ஸோ எம்பிவி காரில் 8 இருக்கை பெற்ற மஹிந்திரா மராஸ்ஸோ M8 மாடல் ரூ.13.98 லட்சம் விலையில் விற்பனைக்கு கிடைக்கின்றது.

ஏற்கனவே விற்பனையில் உள்ள எம் 8 வேரியன்ட் 7 இருக்கை கொண்ட மராஸ்ஸோ எம்பிவி மாடலை விட ரூ.8000 மட்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது. மற்றபடி எந்த விதமான கூடுதல் வசதிகளையும் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மஹிந்திரா மராஸ்ஸோ சிறப்பம்சங்கள்:

1. மஹிந்திரா மராஸ்ஸோ கருப்பு மற்றும் பளபளப்பான T- வடிவ டாஷ்போர்ட், அலுமினியம் இன்செர்ட்ஸ், லெதர் சீட், 7.0 அங்குல தொடுதிரை, தானியங்கி காலநிலை கட்டுப்பாடு மற்றும் மூன்று வரிசைகளுக்கு ஏசி வெண்ட்ஸ், ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்டராய்டு ஆட்டோ, ஸ்டீயரிங்களில் பொருத்தப்பட்டுள்ள ஆடியோ கண்ட்ரோல், புரஜெக்டர் ஹெட்லேம்ப்ஸ், டேடைம் ரன்னிங் லைட், 17 அங்குல அலாய் வீல் போன்றவற்றை கொண்டுள்ளது.

2. மகேந்திரா மராஸ்ஸோ, 1.5 லிட்டர் டீசல் இன்ஜின், 121hp மற்றும் 300Nm டார்க் உருவாக்கும். இந்த கார்கள் 5 ஸ்பீட் மெனுவல் கியர்பாக்ஸ், அனைத்து வகையான கார்களும் எர்பேக்ஸ், ABS-களுடன் கூடிய EBD, ஆகியவற்றுடன் வழக்கமாக கிடைக்கும் ரியர் பார்க்கிங் சென்சார்ஸ்களை கொண்டிருக்கிறது.

தற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)

தொடர்புடையவை

Close
Close