மனைவியை கொலை செய்ய 2 நாள் விடுமுறை கோரி விண்ணப்பித்த வங்கி ஊழியர் – அதிர்ச்சி தகவல்

பீகார் மாநிலம் பாக்ஸரை என்ற இடத்தை சேர்ந்தவர் முன்னா பிரசாத் , கிராம வங்கியில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அவரின் மனைவி சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு ,அங்குள்ள மருத்துமனையில் சிகிட்சை பெற்று வருகிறார். அதனால் முன்னா பிரசாத் தன் மனைவியை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல அடிக்கடி விடுமுறை எடுக்கவேண்டி இருந்தது.

ஒரு கட்டத்தில் அவர் விடுப்பு எடுக்கவேண்டிய அளவைவிட அதிகஅளவில் எடுத்ததால் , இதற்கு மேல் விடுமுறை வழங்க அவரது உயர் அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.

அதனால் விரக்தி அடைந்த முன்னா பிரசாத் , தன மனைவிக்கு கொலை செய்து அவருக்கு இறுதிச்சடங்கு செய்து வரும் வரை இரண்டு நாள் விடுமுறை வழங்க கோரி , தன் மேலதிகாரிக்கு கடிதம் எழுதினார்.

அந்த கடிதத்தின் நகலை பாட்னாவில் உள்ள வங்கியின் தலைமையகம், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சரின் அலுவலகம் , பிரதமர் மற்றும் ஜனாதிபதியின் அலுவலகத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த வங்கி நிர்வாகம் அவருக்கு உடனடியாக விடுப்பு வழங்கி உத்தரவிட்டது.

தன் மனைவியின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாலும், அவரை கவனிக்க தான் தனக்கு அதிக நாள் விடுப்பு தேவைப்படுவதாலும், தான் இத்தகைய கடிதம் எழுதியதாக முன்னா பிரசாத் மிக வருத்தத்துடன் கூறினார். முன்னாவின் இத்தகைய செயலால் அந்த வங்கி ஊழியர்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)

தொடர்புடையவை

Close
Close