கடத்தல் சிலைகளை இந்தியாவுக்கு ஒப்படைக்க வரும் – ஆஸ்திரேலிய பிரதமர்

இந்தியா முழுவதும் குறிப்பாக தமிழ்நாட்டில் இருந்து பழமைவாய்ந்த சிலைகள் ஆஸ்திரேலியா நாட்டுக்கு கடத்தி செல்லப்பட்டது. இவ்வாறு கடத்தி செல்லப்படும் சிலைகள் சுபாஷ் கபூர் என்ற கடத்தல் மன்னன் அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் மேன்ஹாட்டான் என்ற இடத்தில் காலை பொருட்களை விற்பனை செய்யும் கலைக்கூடம் நடத்தி வந்தார்.

ஆனால் அங்கு கடத்தல் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் கடத்தல் தொடர்பான பல வழக்குகள் சுபாஷ் கபூர் மீது தொடரப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

இதற்க்கிடையே சமீபத்தில் கூட மிகவும் பெருமை மிக்க நடராஜர் சிலை ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியாவுக்கு மேளதாளத்தோடு திரும்பி கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில் இந்தியாவுக்கு சொந்தமான 2 துவார பாலகர்கள் சிலைகளும் மிகவும் பழமை மிக்க நாக ராஜர் சிலையும் ஆஸ்திரேலியாவுக்கு கடத்தி செல்லப்பட்டு அங்கு அதிக விகளுக்கு விற்கபட்டது தெரியவந்துள்ளது.

இத்தகைய சிலை கடத்தல் தொடர்பான பிரச்சினை ஆஸ்திரேலிய அரசுக்கு தெரியவந்ததும் , அந்நாட்டு அரசு அந்த சிலைகளை மீட்டு வைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.இந்நிலையில் அஸ்தேரேலிய நாட்டு பிரதமர் ஸ்க்காட் மோரிசன் அடுத்த ஆண்டு ஜனவரி மதம் இந்திய வருவதாகவும் அவ்வாறு வரும் போது அந்த பழமைமிக்க சிலைகளையும் கொண்டுவந்து இந்தியாவிடம் ஒப்படைப்பதாகவும் கூறப்பட்டுகிறது.

தற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)

தொடர்புடையவை

Close
Close