நடிகரும் முன்னாள் திமுக எம்.பி.யுமான ஜே.கே.ரித்திஷ் காலமானார்-தலைவர்கள் இரங்கல்

திமுக கட்சியின் முன்னாள் எம்பியும் , நடிகருமாக இருந்தவர் ஜே.கே.ரித்திஷ் (46) இவர் இன்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் காலமானார். இவர் உடல்நல குறைவால் ராமநாதபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொண்டிருந்தார் அப்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் உயிர் பிரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரித்திஷ் அவர்கள் 2009-ல் ராமநாத தொகுதியில் திமுக சார்பில் எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். மேலும் இவர் கானல் நீர், நாயகன் , பெண்சிங்கம் மற்றும் கடைசியாக எல்.கே.ஜி படத்தில் நடித்துள்ளார்.

ஏற்கனவே அவருக்கு இதய பிரச்சனை இருந்ததால் அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டிருந்தது. அந்த சிகிச்சைக்கு பின்னர் அவர் உடல் தேறியதும் அதிமுக-விற்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். இன்று அதாவது ஏப்ரல் 13-ஆம் தேதியும் பிரட்சரத்தில் ஈடுபட்டிருந்தார்.பிரசாரம் முடிந்ததும் அவர் ராமநாதபுறத்தில் உள்ள வீட்டில் உணவருந்தி ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடிரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரது உறவினர்கள் அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் வழியிலேயே அவர் உயிர் பிரிந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் அதிமுக எம்ஜிஆர் இளைஞ்சர் அணி துணை செயலர் மற்றும் நடிகருமான ஜே.கே.ரித்திஷ் அவர்களின் மறைவுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிச்சாமி ஆகியோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும் நடிகர் சங்க நிர்வாகிகளும் தங்கள் இரங்கலை தெரிவித்துள்ளனர்.

தற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)

தொடர்புடையவை

Close
Close