செயற்கை மின்னல் உருவாக்கம் – உலகிலேயே முதல் முறையாக சாதனை !!

உலகிலேயே முதல்முறையாக மேகமூட்டத்தில் லேசர் அலைக்கற்றை செலுத்தி செயற்கை மின்னல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கை மின்னலில் இருந்து மின்சாரம் தயாரிப்பதை சாத்தியமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் விஞ்ஞானிகள்.

மின்சாரத்தை முதல் முறையாக கண்டுபிடித்து அறிமுகம்படுத்தியவர் மைக்கல் பாரடே. காந்தமும் கம்பி சுருளும் ஒன்றையொன்று தழுவும் போது மின்சாரம் உண்டாகிறது. இதை தொடர்ந்து அடுத்தடுத்து ஏற்பட்டுள்ள விஞ்ஞான பரிமாற்றத்தால் வெப்பத்திலிருந்து மின் உற்பத்தி, காற்றிலிருந்து மின்னுற்பத்தி, நீரிலிருந்து மின்னுற்பத்தி, என அணு மின் உற்பத்தி வரை விஞ்ஞானம் வளர்ந்துவிட்டது.

உலகம் முழுவதும் பயன்படுத்தும் மின்சாரத்தை விட 40 மடங்கு அதிக மின்சாரத்தை கொண்டிருப்பது மின்னல் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் , லேசர் அலைக்கற்றலை கடும் மேகமூட்டத்தில் செலுத்தி செயற்கை மின்னலை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இரு மெகா கூட்டம் ஒன்றையொன்று கடக்கும் போது அதிதிறன் லேசர் அலைக்கற்றை மேகத்தைநோக்கி செலுத்தப்பட்டது. மிக வேகமான மற்றும் குறைந்த கால இடைவெளியில் லேசரை வேகமாக செலுத்தப்பட்டதால் , புலமை மின்னுட்டம் உருவாக்கி மின்னல் ஏற்பட்டது. இவ்வாறு செய்த இந்த நிகழ்வு இயைபியல் வரலாற்றிலேயே முதல் முறையானதாக கருதப்படுகிறது.

தற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)

தொடர்புடையவை

Close
Close