மெக்ஸிகோ நாட்டில் எரிபொருள் குழாயில் திடீர் தீ- 20 பேர் பலி , 54 பேர் படுகாயம்

மெக்ஸிகோ நாட்டில் உள்ள ஹிடால்கோ என்ற மாகாணத்தில் உள்ளது லஹுலிலிபன் என்ற சிறிய நகரம். இந்த நகரத்தின் வழியாகத்தான் எரிபொருள் குழாய் அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த குழாயின் வழியாக எரிபொருள் செலுத்தப்படும் போது அதில் சட்டவிரோதமாக துளையிட்டு பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்களை அந்த நகரின் உள்ளூர் மக்களே திருடி விற்பதாக கூறப்பட்டிருந்தது.

இவ்வாறு சட்ட விரோதமாக எரிபொருட்களை மக்கள் திருடும் போது அந்த குழாயில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அங்கிருந்த மக்களில் 21பேர் முழுவதுமாக உடல் எரிந்து பலியாகினர்.மேலும் 54 பேர் பலத்த தீ காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு ஏற்பட்ட இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

தற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)

தொடர்புடையவை

Close
Close