சென்னைக்கு ரெயில் மூலம் தண்ணீர் கொண்டுவரும் முயற்சி – சோதனை ஓட்டம் முடிந்தது

சென்னையில் பருவ மழை பொய்த்ததால் தண்ணீர் தட்டுப்பாட்டால் மக்கள் தவித்து வருகின்றனர். தலைநகரான சென்னையில் மக்கள் தொகை அதிக அளவில் உள்ளதால் அங்கு அதிகஅளவில் தண்ணீர் தேவை நிலவி வருகிறது.இந்நிலையில் சென்னை வாசிகளின் தண்ணீர் தேவையை பூர்த்திசெய்ய ஜோலார் பேட்டையிலிருந்து ரெயில் மூலம் தண்ணீர் கொண்டுவரும் முயற்சி எடுக்கப்பட்டது. தற்போது அந்த முயற்சியின் முதல் படியாக நேற்று சோதனை ஓட்டம் முடிவடைந்தது.

தற்போது சென்னையில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையை போக்க வேலூர் மாவட்டம் , ஜோலார் பேட்டையில் இருந்து நாள் ஒன்றிற்கு 10 மில்லியன் லிட்டர் குடிநீரை சென்னை வில்லிவாக்கத்திற்கு ரெயில் மூலம் கொண்டு வர முதல்வர் ரூ.65 கோடியை ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவின் அடிப்படையில் ரெயில் பெட்டிகளில் நீர் நிரப்புவதற்கான குலை பாதிக்கும் பணிகள் அனைத்தும் முடிவடைந்து விட்டன. இந்நிலையில் ஜோலார் பேட்டையில் இருந்து சென்னைக்கு நீர் கொண்டுவரும் முயற்சியும் முதல் படியான சோதனை ஓட்டம் நேற்று வெற்றிகரமாக முடிவடைந்தது.

இவ்வாறு ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு ரெயில் மூலம் ஒரு முறை தண்ணீர் கொண்டுவர தமிழக அரசு சார்பில் ரெயில்வே துறைக்கு ரூ.8.60 லட்சம் கட்டணம் வழங்க வேண்டும். தற்போது நாள், ஒன்றிற்கு 3 முறை தண்ணீர் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ள நிலையில், இதற்காக தமிழக அரசு சார்பில் 30 நாட்களுக்கு ரூ.7.74 கோடி செலவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிவடைந்ததால், இந்த திட்டத்தை முதல்வர் பழனிசாமி இன்னும் ஓரிரு நாட்களில் தொடங்கி வைப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)

தொடர்புடையவை

Close
Close