வெங்காய விலை உயர்வால் பிரியாணி விலையும் உயர்ந்தது – பிரியாணி பிரியர்கள் அதிர்ச்சி !

தொடர்ந்து அதிகரித்து வரும் வெங்காய விலையின் உயர்வால் பிரியாணியும் விளையும் அதிகரித்துள்ளது இதனால் பிரியாணி பிரியர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

தமிழ்நாட்டில் இறக்குமதி செய்யப்படும் வெங்காயம் ஆந்திரா, கர்நாடகா மற்றும் மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில் அங்கு பெய்துவரும் தொடர் மழையின் காரணமாக வெங்காய சாகுபடி மிகவும் பாதிப்படைந்துள்ளது. இதனால் சென்னைக்கு கொண்டுவரப்படும் வெங்காயத்தின் அளவு பெருமளவு குறைந்துள்ளது.

இதனால் சென்னையில் வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. பெரியவெங்காயம் ரூ.80-க்கு விற்கப்படுகிறது.

இவ்வாறு தொடர்ந்து அதிகரித்து வரும் வெங்காயவிலை உயர்வால் பிரியாணி விலையும் உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டு உணவு வகைகளை பார்த்தால் அதில் வெங்காயத்தின் பங்களிப்பானது மிகவும் பெரியது. குறிப்பாக பிரயாணி தேவையான தயிர் பச்சடி செய்வதற்கும் வெங்காயம் மிகவும் இன்றியமையாத பொருளாக உள்ளது.

சென்னை பிரியாணி கடை உரிமையாளர்கள் சார்பில் ஒரு நாளைக்கு ஒரு டன் வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டது.ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள வெங்காயவிலை உயர்வால் ஒருநாளைக்கு அரை டன் வெங்காயம் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

இதனால் பிரியாணியின் விலையானது 30 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை உயர்த்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது பிரியாணி பிரியர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)

தொடர்புடையவை

Close
Close