பன்றி காய்ச்சலால் சிகிச்சை பெற்று வந்த பாஜக தலைவர் அமித் ஷா இன்று டிஸ்சார்ஜ் !

பன்றி காய்ச்சல் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாஜக தேசிய தலைவர் அமித் ஷா இன்று வீடு திரும்பினார்.

பாஜக தேசிய தலைவா் அமித்ஷா கடந்த சில தினங்களாக உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் தொடா்ந்து சிகிச்சை பெற்று வந்தாா். இருப்பினும் உடல் சோா்வு ஏற்பட்டிருந்ததைத் தொடா்ந்து, அவருக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டது.

பரிசோதனை முடிவில் அமித்ஷாவுக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பது தெரிய வந்தது. இதனைத் தொடா்ந்து அமித்ஷா கடந்த 16-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவர் நலமாக இருப்பதாக ஆஸ்பத்திரி நிர்வாகம் அறிவித்திருந்தது. இந்நிலையில் இன்று காலை அமித் ஷா எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார்.

இது தொடர்பாக பாஜக மாநிலங்களவை உறுப்பினரும், ஊடகப் பிரிவுத் தலைவருமான அனில் பலூனி கூறுகையில்,

“பன்றி காய்ச்சல் பாதிப்பு காரணமாக பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், அவர் பூரண உடல் நலம் பெற்று வீடு திரும்பியுள்ளார். அமித் ஷாவுக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)

தொடர்புடையவை

Close
Close