சென்னை வடபழனி பணிமனையில் பேருந்து ஒன்று திடீரென விபத்து!

சென்னை வடபழனியில் அமைந்துள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையில் நேற்றிரவு பேருந்துகளை பராமரிப்பு பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அப்போது பேருந்து ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த சுவரின் மீது மோதியது அப்போது அங்கிருந்த 7 ஊழியர்கள் இந்த விபத்தில் சிக்கிக்கொண்டனர்.

விபத்தில் சிக்கிய ஊழியர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லபட்ட போது , அவர்களில் இரண்டு ஊழியர்கள் வழியிலேயே உயிரிழந்து விட்டனர். மற்ற 5 ஊழியர்களுக்கும் கீழ்பாக்க அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பேருந்துகள் முறையாக பராமரிக்கப்படாததால் தான் இந்த விபத்து நேர்ந்ததாக கூறி இன்று காலை முதல் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மரணமடைந்த  ஊழியர்களின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த விபத்தானது நள்ளிரவு 1 மணியளவில் நடைபெற்றது , அதனால் இன்று காலை முதல் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர் , இதனால் பேருந்துகள் இயக்கப்படாததால் மக்கள் பெருமளவு பாதிப்படைந்துள்ளனர்.

தற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)

தொடர்புடையவை

Close
Close