சென்னையில் குடியரசு தின விழா கொண்டாட்டம்!

சென்னை: இந்திய குடியரசு தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

சென்னையில் நடந்த விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தேசியக் கொடியேற்றி வைத்தார்.

இந்தியா முழுவதும் இன்று குடியரசு தின விழா வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது.

தலைநகர் டெல்லி விழாக்கோலம் பூண்டுள்ளது. இதேபோல அனைத்து மாநிலங்களிலும் குடியரசு தின விழா உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.

சென்னையில் கடற்கரைச் சாலையில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தேசியக் கொடி ஏற்றி வைத்து முப்படையினரின் அணிவகுப்பு மரியாதையை பெற்றுக் கொண்டார்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

தேசியக் கொடி ஏற்றி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து முப்படையினர் அணிவகுப்பு நடந்தது. அதைத் தொடர்ந்து காவல்துறையினரின் அணிவகுப்பும்  நடைபெற்றது. தொடர்ந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குடியரசு தின விழா கொண்டாட்டத்தையொட்டி கடற்கரைச் சாலை முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)

தொடர்புடையவை

Close
Close