எம்.ஜி.ஆர்.உருவம் பொறித்த நாணயத்தை வெளியிட்டார் முதலமைச்சர் பழனிச்சாமி!

இன்று எம்.ஜி.ஆர்.அவர்களின் 102-வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகின்றது.

அவரது பிறந்த நாளை முன்னிட்டு ஆதிமுக தலைமை அலுவலகத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர்.அவர்களின் உருவச்சிலைக்கு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் மாலை அணிவித்து மரியாதையை செலுத்தினர்.

அவர்களை தொடர்ந்து மற்ற அமைச்சர்களும் , ஆதிமுக-வின் முக்கிய நிர்வாகிகளும் அவரது சிலைக்கு மரியாதையை செலுத்தினர்.

எம்.ஜி.ஆர்.அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கிண்டியில் உள்ள எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைகழக வளாகத்தில் விழா ஒன்று நடத்தப்பட்டுள்ளது .அந்த விழாவில் கலந்துகொண்ட முதலமைச்சர் பழனிசாமி எம்.ஜி.ஆரின் உருவம் பொறித்த நாணயங்களை வெளியிட்டார்.

மேலும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 28-ஆம் தேதி எம்.ஜி.ஆர் வளைவு கட்டுவதற்கு மெரினா கடற்கரையை ஒட்டியுள்ள காமராஜ் சாலையில் அடிகள் நாட்டி ரூ.2.52 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது.இந்த வளைவை திறக்க முதலில் தடை விதித்த நீதி மன்றம் பின்னர் விழா ஏதுமின்றி திறக்க அனுமதி வழங்கியது. எனவே ஐகோர்ட் உத்தரவை அடுத்து எந்த தடைகளும் இல்லாமல் எம்.ஜி.ஆர் வளைவு திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)

தொடர்புடையவை

Close
Close