கல்லூரிகள் தொடர் விடுமுறை அண்ணா பல்கலைக்கழக தேர்வுகளும் ஒத்திவைப்பு

உள்ளாட்சி தேர்தல் , கிருஸ்துமஸ் , ஆங்கில வருட பிறப்பு போன்ற காரணங்களுக்காக நாளை முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு விடுமுறை அளித்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ள தொடர் விடுமுறை காரணமாக நாளை முதல் 31-ஆம் தேதி வரை நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த தேர்வு தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்;

டிசம்பர் 21 முதல் 31-ம் தேதி வரை நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஒத்திவைக்கப்பட்டுள்ள தேர்வுகள் ஜனவரி 2-ம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அணைத்து விவரங்களும் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)
Close
Close