காலக்கொடுமை:மத்திய அரசு சொத்துக்களை விற்க திட்டம்!

பெரு நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டு வந்த கார்ப்பரேட் வரி, சமீபத்தில் குறைக்கப்பட்டது. இதன் காரணமாக, மத்திய அரசுக்கு, 1.45 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஈடு செய்ய, மத்திய அரசுக்கு சொந்தமான பல்வேறு துறைகளின் சொத்துக்களை விற்க, ‘நிதி ஆயோக்’ முடிவு செய்துள்ளது.

இதன் அடிப்படையில் விற்கப்படும் சொத்துக்கள் விவரம்:

விமானத்துறைக்கு சொந்தமான, 15 ஆயிரம் கோடி ரூபாய்

மின்துறைக்கு சொந்தமான, 20 ஆயிரம் கோடி ரூபாய்

கப்பல் போக்குவரத்து துறையின், 7,500 கோடி ரூபாய்

தேசிய நெடுஞ்சாலைக்கு சொந்தமான, 25 ஆயிரம் கோடி ரூபாய்

ரயில்வேக்கு சொந்தமான, 22 ஆயிரம் கோடி ரூபாய்

சொத்துக்களை விற்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்த திட்ட அறிக்கை, அமைச்சரவையின் ஒப்புதலுக்காக, விரைவில் அனுப்பி வைக்கப்பட உள்ளது.

தற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)

தொடர்புடையவை

Close
Close