உத்திரபிரதேசத்தில் பாலியல் குற்றம் புரிந்த குற்றவாளிக்கு தூக்கு தண்டனை அறிவிப்பு !

உத்திரபிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டத்தை சேர்ந்த நாசில் என்பவர் கடந்த மே மாதம் 6 வயது சிறுமியை கடத்தியது மட்டுமல்லாமல் , பாலியல் வன்கொடுமை செய்து அந்த சிறுமியை கொலை செய்ததற்காக போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

பின்னர் அந்த குற்றவாளி மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் இந்த வழக்கு விரைவு நீதிமன்றத்திற்க்கு மாற்றப்பட்டது.

தற்போது நாசில் மீதான வழக்கு , விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டு நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு தூக்கு தண்டனை விதித்து உத்திரபிரதேச விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)

தொடர்புடையவை

Close
Close