சுவையான இறால் குழம்பு !

தேவையான பொருட்கள்:

இறால் -200 கிராம்-சுத்தம் செய்தது
பெரிய வெங்காயம் -1
தக்காளி -1
பச்சை மிளகாய் -2
மஞ்சள் தூள் -அரை டீஸ்பூன்
மிளகாய் தூள் -1 1/2 டேபிள்ஸ்பூன்
மல்லித் தூள் -2 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லி தழை -சிறிது அளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் -தேவையான அளவு
புளி – எலுமிச்சை பழம் அளவு
கடுகு – 1/2 டேபிள்ஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1/2 டேபிள்ஸ்பூன்
கருவேப்பில்லை – சிறுது
முருங்கைக்காய் ண்டுகளாக நறுக்கினது-1
கத்தரிக்காய் ண்டுகளாக நறுக்கினது-4
உருளைக்கிழங்கு துண்டுகளாக நறுக்கினது -1

செய்முறை:

புளி – எலுமிச்சை பழம் அளவு சமைப்பதற்கு 1/2 மணிநேரம் முன்னதாக தண்ணீரில் ஊற வைத்து கரைத்து கொள்ளவும்.

வெங்காயம் ,பச்சை மிளகாய் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கருவேப்பில்லை, உளுத்தம் பருப்பு சேர்க்கவும். கடுகு வெடித்த பிறகு அதில் வெங்காயம் ,பச்சை மிளகாய் மற்றும் தக்காளியை போட்டு வதக்கிக் கொள்ளவும்.

பின்பு நறுக்கின முருங்கைக்காய், கத்தரிக்காய், உருளைக்கிழங்கு, இறால் அனைத்தையும் சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும். ஒரு 5 நிமிடம் நன்றாக வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும்.

அதன் பின் கரைத்து வைத்துள்ள புளித்தண்ணீரை ஊற்றி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து உப்பு காரம் சரிபார்த்து பின் ஒரு மூடியை போட்டு மூடவும். ஒரு கொதி வந்ததும் மிதமான சூட்டில் வைத்து காய் வெந்ததும் மூடியை அகற்றிவிட்டு, லேசான சூட்டில் வைத்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வேக வைத்து இறக்கவும். சுவையான மணமான இறால் குழம்பு ரெடி.

தற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)

தொடர்புடையவை

Close
Close