ஆசிரியர்களின் வேலைநிறுத்தம் நடைபெற்றாலும் , குறித்தபடி வெள்ளிக்கிழமை முதல் +2 செய்முறை தேர்வுகள் நடைபெறும் – தேர்வுத்துறை

திட்டமிட்டபடி பிளஸ் 2 செயல்முறை தேர்வுகள் வரும் வெள்ளிக்கிழமை முதல் தொடங்கி நடைபெறும் என்று தேர்வுத்துறை இயக்குனர் வசுந்திரா தேவி தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதிலும் உள்ள அரசு ஊழியர்களும், ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 22-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லாமல் மாணவர்கள் பள்ளிக்கு வரும் சூழ்நிலையுள்ளது.

இந்நிலையில் +2 மாணவர்களுக்கு அறிவித்தபடி வரும் 1-ஆம் தேதி செய்முறை தேர்வுகள் நடைபெறுமா அல்லது தேர்வுத்தேடி மாற்றப்படுமா என்ற கேள்வி எழுந்து வந்தது.

இந்நிலையில் தேர்வுத்துறை இயக்குனர் வசுந்திரா தேவி வெளியிட்டுள்ள அறிக்கையில் ; பிளஸ் 2 மாணவர்களுக்கு திட்டமிட்டபடி வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் செய்முறை தேர்வுகள் தொடங்கும். தேர்வுத்துறை பணியாளர்களின் போராட்டத்தாலும், ஆசிரியர்களின் போராட்டத்தாலும் தேர்வு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று அவர் தெரிவித்தார்.

தற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)

தொடர்புடையவை

Close
Close