கழுதைப்பால் குளியல் சோப்பு – விலை விவரம்!

சண்டிகரில் மத்திய மகளிர் மற்றும் குழந்தை வளர்ச்சி துறை சார்பில் பொருட்காட்சி ஒன்று தொடங்கப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றது. இந்த பொருட்காட்சியை மத்திய மந்திரி மேனகா காந்தி தொடங்கிவைத்துள்ளார். இந்த பொருட்காட்சியில் கழுத்தை பால் கொண்டு தயாரிக்கப்பட்ட குளியல் சோப்பிற்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதில் முக்கியமானது என்னவென்றால் 100கிராம் எடை கொண்ட ஒரு குளியல் சோப்பு ரூ.500 வரை விற்பனைசெய்யப்பட்டு வருகின்றது.

இந்த கழுதைப்பாலில் அதிக அளவில் மருத்துவ பண்புகள் உள்ளதால் ஒரு லிட்டர் கழுத்தை பால் சுமார் ரூ.2 ஆயிரம் வரை விற்பனைசெய்யப்பட்டு வருகிறது.

இத்தகைய கழுதைப்பால் சோப்பு தயாரிக்கும் நிறுவனத்தின் நிறுவனரான பூஜா கவுல் கூறியதாவது; கழுதைப்பாலில் பல மருத்துவ பண்புகள் உள்ளது. இது பாக்டீரியா தோற்று நோய்கலில் இருந்து பாதுகாப்பதுடன் , வயது முதிர்வு, தோல் சுருங்குதல் ஆகியவற்றிற்கு எதிராக செயல்படும் மருத்துவ பண்புகளை கொண்டதாக உள்ளது.

எனவே இத்தகைய மருத்துவப்பண்புகளை கொண்ட எங்களது இந்த தயாரிப்பிற்கு தமிழ்நாடு மற்றும் கர்நாடக போன்ற தென்மாநில மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. அவர்கள் கழுத்தை பாலின் பலன்களை அறிந்துள்ளனர் என்று அவர் கூறினார்.

தற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)

தொடர்புடையவை

Close
Close