பிலிப்பைன்சில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 8ஆக உயர்வு

பிலிப்பைன்ஸ் நாடானது பல தீவு கூட்டங்களை உள்ளடக்கிய ஒரு தீவாகும். அந்த தீவின் லூஜன் என்ற தீவின் வடக்கே இத்பாயத் என்ற நகரின் வடகிழக்கே 12கி.மீ தொலைவில் , 12கி.மீ ஆழத்தில் நிலைகொண்டிருந்ததாகவும் ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆக பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த நிலநடுக்கம் இன்று அதிகாலை 4.16 மணிக்கு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாலையில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் தூங்கிக்கொண்டிருந்த மக்கள் அலறியடித்து கொண்டு வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சம் அடைந்தனர். அதுமட்டும் அல்லாமல் அங்கிருந்த வரலாறு புகழ்பெற்ற கிருஸ்துவ ஆலயமும் அதை சுற்றி அமைந்திருந்த வீடுகளும் இடிந்து விழுந்ததாக கூறப்பட்டுள்ளது. சாலைகளின் சில இடத்திலும் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கத்தால் 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ,60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு மேயர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் அதே பகுதியில் சில மணி நேர இடைவெளிக்கு பின்னர் அடுத்தடுத்து இரு முறை நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போன்று சிலகாலமாக இந்தோனேஷியா மற்றும் அமெரிக்காவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் உணரப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)

தொடர்புடையவை

Close
Close