எலியில் இருந்து எச்.ஐ.வி கிருமியை அழித்து – அமெரிக்க பல்கலைக்கழகம் சாதனை

எலியை தாக்கிய எச்.ஐ.வி கிருமியை அழித்து அமெரிக்க பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஒரு மிகப்பெரிய சாதனை படைத்துள்ளனர். எச்.ஐ.வி கிருமியால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்துவதற்க்கு தற்போது வரை மருந்து கண்டுபிடிக்க முடியாத நிலையில். இந்த நோயை அதாவது கிருமியை அழிக்கும் மருந்தை கண்டுபிடிப்பதற்க்காக உலகம் முழுவதும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் கடுமையான முயற்சியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த நெப்ரஸ்கொ பல்கலை கழக ஆராய்ச்சியாளர்கள் எலியின் உடலில் எச்.ஐ.வி கிருமியை செலுத்தி அந்த கிருமியையும் அழித்து சாதனை படைத்துள்ளனர். முன்னர் எச்.ஐ.வி கிருமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏஆர்டி எனப்படும் கூட்டு மருத்துவ சிகிட்சை மட்டுமே அளிக்கப்பட்டு வந்தது. இந்த சிகிச்சையானது நோய் தொற்றில் இருந்து முழுமையாக காப்பாற்றாது, ஆனால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்நாளை நீடித்து , அவர்கள் இயல்பாக வாழ வழிவகை செய்கிறது.

தற்போது இந்த கிருமியால் பாதிக்கப்பட்ட எலிக்கு புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட மருந்தை ஆராய்ச்சியாளர்கள் செலுத்தினர், இந்த நிலையில் எலியின் மரபணுவிலிருந்து எச்.ஐ.வி கிருமி அகற்றப்பட்டுள்ளது.எச்.ஐ.வி கிருமியால் பாதிக்கப்பட்டவர்களின் மரபணுக்களை மாற்றி அமைப்பதே , இந்த சோதனையின் முக்கிய அம்சமாகும். இந்த முயற்சிதான் எச்.ஐ.வி என்ற நோய்க்கு தீர்வு காண்பதில் கிடைத்த முதல் வெற்றி படியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)

தொடர்புடையவை

Close
Close