ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து வெடிகுண்டு வெடிப்பு – பலி எண்ணிக்கை 15-ஆக உயர்வு

ஆப்கானிஸ்தானில் அமைந்துள்ள காபூலின் கிழக்கு பகுதியில் பெட்ரோலியம் மற்றும் சுரங்கத்துறை அமைச்சகம் அமைந்துள்ளது. அதில் பணிபுரியும் ஊழியர்கள் ஒரு பேருந்தில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது தற்கொலைப்படையை சேர்ந்த பயங்கரவாதி ஒருவன் வெடிகுண்டுகள் நிரம்பிய மோட்டார்சைக்கிளை ஒட்டி வந்து அந்த பேருந்து மீது மோதி வெடிக்க செய்தான். இந்த வெடிகுண்டு விபத்தால் அந்த பகுதியே அதிர்ந்தது.

இவ்வாறு ஏற்படுத்தித்தப்பட்ட அந்த விபத்தால் பேருந்து முழுவதும் உருக்குலைந்து.அந்த பகுதியே புகை மண்டலமாக காட்சியளித்தது. மக்கள் இந்த பேரதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் அடுத்தடுத்து இரு குண்டுகள் வெடித்தது.இந்த தொடர் குண்டுவெடிப்பில் இதுவரை 15 பேர் பலியாகியுள்ளனர். 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சிலரது நிலைமை மோசமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய தொடர் குண்டுவெடிப்பிற்கு இதுவரை எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனவே போலீஸ் தரப்பில் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)

தொடர்புடையவை

Close
Close