சர்க்கரை ரேஷன் குடும்ப அட்டையை அரிசி குடும்ப அட்டையாக மாற்ற அவகாசம் நீட்டிப்பு – தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் பொது ரேஷன் விநியோக திட்டத்தின் கீழ் 10 லட்சத்தி 19 ஆயிரத்து 491 பேர் சர்க்கரை அட்டைதாரர்களாக உள்ளனர்.இந்நிலையில் இவர்களில் பெரும்பாலானோர் தங்கள் அட்டையை அரிசி அட்டைகளாக மாற்றிக்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளனர்.

அவர்களின் வேண்டுகோலின் அடிப்படையில் சர்க்கரை ரேஷன் குடும்ப அட்டையை அரிசி குடும்ப அட்டையாக மாற்றி கொள்ள தமிழக அரசு வழிவகை செய்திருந்தது. இதற்கான விண்ணப்பங்களை வழங்க இன்றுடன் காலக்கெடு வழங்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் மேலும் 3 நாட்களுக்கு அவகாசத்தை வழங்கி உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு. இதற்காக www.tnpds.gov.in என்ற இணையதளத்தில் 29-ஆம் தேதிவரை சர்க்கரை அட்டைதாரர்கள் விண்ணப்பித்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்க்கு அடுத்து மேலும் கால அவகாசம் வழங்கப்படமாட்டாது என்றும் , இந்த விண்ணப்பங்கள் மீது தகுதியின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கள் துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

தற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)

தொடர்புடையவை

Close
Close