30 அடி கிணற்றில் விழுந்த 77 வயது மூதாட்டியை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

சென்னை அருகே இருந்த 30 அடி கிணற்றில் 77 வயது மூதாட்டி தவறி விழுந்தார்.அவரை தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்புடன் மீட்டனர்.

சென்னை குரோம்பேட்டை சாந்தி நகரை சேர்ந்தவர் சரோஜா என்ற 77 வயது மூதாட்டி. எவர் தன வீட்டின் அருகே இருந்த 30 அடி ஆழம் கொண்ட கிணற்றில் நேற்று தவறி விழுந்தார். இதை தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் அளித்த தகவலின் பெயரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் கிணற்றில் விழுந்த அந்த மூதாட்டியை கயிறு கட்டி பாதுகாப்புடன் மீட்டனர்.

மீட்கப்பட்ட மூதாட்டிக்கு சில காயங்கள் இருந்ததால் அவரை அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அந்த மூதாட்டி தவறிதான் கிணற்றில் விழுந்தாரா இல்லை இதன் பின் வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் குரோம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)

தொடர்புடையவை

Close
Close