மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவு:சராசரியாக 65% பதிவு!

டில்லி:

17வது மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாடு முழுவதும் நேற்று 91 தொகுதிகளில் அமைதியாக நடந்து முடிந்தது. சராசரியாக 65 சதவிகிதம் வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.

மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என்று  ஏற்கனவே தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி, 91 லோக்சபா தொகுதியுடன் ஆந்திரா, ஒடிசா, அருணாசல பிரதேசம், சிக்கிம் உள்ளிட்ட மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தலும் நேற்று நடந்தது.

காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதும், , மக்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்து வந்தனர். வாக்குப்பதிவு மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது.ஆந்திராவில் மட்டும் நள்ளிரவு வரை வாக்குப்பதிவு நீடித்தது.அங்கு உள்ள வாக்குபதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்ப்பட்டதே தாமதத்திற்கு காரணம் என கூறப்பட்டது.

முதல் கட்ட தேர்தலில் 91 லோக்சபா தொகுதிகளுக்கு 1279 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

நேற்றைய தேர்தலில் மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, கிரண் ரிஜூஜூ, வி.கே.சிங் உள்பட சிலர் போட்டியிட்ட தொகுதிகளில் வாக்குப்பதிவு முடிவடைந்தது.

இன்றைய முதற்கட்ட வாக்குப்பதிவில் சராசரியாக 65 விழுக்காடு வாக்குகள் பதிவாகி உள்ளன.

அதிகபட்ச வாக்குப்பதிவு மணிப்பூரில் 78 சதவிகிதமும், அசாமில் 68 சதவிகிதமும் வாக்குகள் பதிவாகி உள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

தற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)

தொடர்புடையவை

Close
Close