பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்ட பரிசு பொருட்கள் ஏலம்- மத்திய அரசு திட்டம்

டெல்லியில் உள்ள தேசிய கலை கூடத்தில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடியின் பரிசு பொருட்களை ஏலம் விட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

1947 முதல் 1962 வரை சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவர்ஹர்லால் நேரு , அவர் 68 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அதன் பின்னர் 15 ஆண்டுகள் பிரதமராக இருந்த இந்திரா காந்தி 115 நாடுகளுக்கு பயணம் செய்து ஒரு பெரிய சாதனையை படைத்தார்.நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்து பின்னர் பிரதமரான வாட்ச்பாய் 48 நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார்.முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் 10 ஆண்டுகளில் 93 நாடுளுக்கு பயணம் செய்துள்ளார்.

ஆனால் பிரதமர் நரேந்திர மோடியோ கடந்த 55 மாதங்களில் 92 நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார். இவ்வாறு பிரதமர் மோடி பயணமாக சென்ற நாடுகளிலும் சரி அல்லது அவரை நேரில் காண வந்த தலைவர்களும் சரி அவருக்கு பரிசாக டர்பன், சால்வை , ஓவியங்கள், புகைப்படங்கள் என பல பரிசுகளை வழங்கியுள்ளனர். எனவே இதுவரை அவருக்கு 1800-க்கும் அதிகமான பரிசுப்பொருட்கள் கிடைத்துள்ளது.

இவ்வாறு பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட பரிசு பொருட்கள் அனைத்தையும் டெல்லியில் உள்ள தேசிய கலை கூடத்தில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் இந்த பரிசு பொருட்களை இம்மாத கடைசியில் ஏலம் விடுவதாக மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா தெரிவித்துள்ளார். அடுத்த 10 முதல் 15 நாட்கலில் இந்த ஏலம் நடத்தப்பட போவதாக தெரிவித்தார். இந்த ஏலத்தின் மூலம் கிடைக்கும் தொகையை அப்படியே தூய்மை கங்கா பணிக்காகவும், கங்கை நதியை பாதுகாத்து புத்துயிர் பெறவைக்கும் பணிக்காகவும் பயன்படுத்தப்பட உள்ளதாக கூறினார்.

இந்த பரிசு பொருட்களை ஏலம் எடுக்க குறைந்தபட்ச ஏல தொகை ரூ.500 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பரிசு பொருட்களை நேரடியாக 2 நாட்களும், இணையதளம் மூலம் 3 நாட்களிலும் ஏலம் எடுக்கலாம். இந்த எலாம் ஒரு உன்னத பணிக்காக நடத்தப்படுவதால் இந்த பரிசு பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல் கடந்த 2015-ஆம் ஆண்டு குஜராத்தில் மோடி அவர்கள் முதல்வராக இருந்த போது கூட அவருக்கு வந்த பரிசு பொருட்களை ஏலம் விட்டு அதன் மூலம் வந்த பணத்தை தூய்மை கங்கை பணிக்காக செலவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)

தொடர்புடையவை

Close
Close