குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை! திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!

சிக்கிம் மாநிலத்தில் கடந்த 1994-ஆம் ஆண்டு முதல் பவன் சாம்லிங் தலைமையிலான ஜனநாயக முன்னணி கட்சி ஆட்சியில் இருந்து வருகிறது.மேலும் தொடர்ந்து 5-வது முறையாகவும் பவன் சாம்லிங் அவர்களே முதல்-மந்திரி பதவி வகித்து வருகிறார்.

சிக்கிம் மாநிலம் கடந்த 20 ஆண்டுகளில் உலக புகழ்பெற்ற உயிரி சுற்றுலா தலம் என்ற பெருமையை பெற்றுள்ளது. நாடு முழுவதும் இயற்கை விவசாயம் மேற்கொள்ளப்படும் முதல் மாநிலம் என்ற சிறப்பையும் பெற்றுள்ளது.

இந்நிலையில் அம்மாநில முதல்மந்திரியான பவன் சாம்லிங் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற கூட்ட தொடரில் “குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை” வழங்கப்படும் எனும் திட்டத்தை அறிவித்தார். அவ்வாறு அவர் அறிவித்ததை தற்போது நடைமுறை படுத்தியும் உள்ளார்.

காங்டாக்கில் நடைபெற்ற ஒரு அரசு விழாவில் 12,000 பேருக்கு வேலைக்கான உத்தரவை பிறப்பித்து அத்திட்டத்தின் முதல்கட்ட பணியை தொடங்கிவைத்தார். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு அவர்களின் தகுதிக்கேற்ப அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது.

இதேபோல் அந்த மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளதால் புதிய வாக்குறுதிகளை சாம்லிங் அறிவித்துள்ளார். இதே போல் சிக்கிமில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் யு பி ஐ எனப்படும் இலவச அடிப்படை மத சம்பளம் என்ற திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

தற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)

தொடர்புடையவை

Close
Close