தானேவில் கனமழை காரணமாக நிலச்சரிவு – 2 பேர் பலி ;ஒருவர் படுகாயம்

மகாராஷ்ரா மாநிலம் தானேவில் தொடர்ந்து கனமழை பெய்துவரும் நிலையில் இன்று அதிகாலை தானே மாவட்டம் கல்வா பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு ஏற்ப்பட்ட நிலச்சரிவால் அங்கு இருந்த ஒரு வீட்டின் மேற்க்கூரை இடிந்து விழுந்தது இதில் அந்த வீட்டில் இருந்த தந்தை மற்றும் மகன் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.

இடிபாடுகளில் சிக்கிய இருவரும் மீட்கப்பட்டு சத்திரபதி சிவாஜி மகராஜ் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.ஆனால் இருவரும் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.மேலும் அதே குடும்பத்தை சேர்ந்த 35 வயது பெண் ஒருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

இவ்வாறு ஏற்பட்டுள்ள நிலச்சரிவில் சிக்கி இதுவரை 19 பேர் மீட்கப்பட்டுள்ளார். இங்கு மேலும் இரண்டு நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)

தொடர்புடையவை

Close
Close