காஞ்சிபுரம் மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் பள்ளி , கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை !

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னரே தொடங்கியிருந்த நிலையில் தற்போது மீண்டும் தீவிரம் அடைந்து அதன் தாக்கத்தை பிரதிபலிக்கின்றது.

டிசம்பர் 1-ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதை தொடர்ந்து தற்போது கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய துவங்கியுள்ளது மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முதல் பரவலாக மழை பெய்ய துவங்கியுள்ளது.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்றுமுதல் கனமழை பெய்து வருவதால் அம்மாவட்டத்தின் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

தற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)

தொடர்புடையவை

Close
Close