நேபாளத்தில் தொடர்ந்து பெய்யும் கனமழை மக்களின் இயல்பு வாழ்கை முற்றிலும் பாதிப்பு

நேபாளத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்துவருகிறது. இந்த கனமழையானது தொடர்ந்து பெய்து வருவதால் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது இதனால் மக்களின் இயல்பு வாழ்கை மிகவும் பாதிப்படைந்துள்ளது.இவ்வாறு சூழ்ந்துள்ள வெள்ளத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது, மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது.பார்க்கும் இடமெல்லாம் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் வீடுகளை வீட்டு வெளியேறாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் இந்த கன மழையால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பெருமளவு சேதம் ஏற்பட்டுள்ளது .இதுவரை இந்த மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 88-ஆக உயர்ந்துள்ளது. 33 பேரை இன்னும் காணவில்லை. 41 பேர் காயமடைந்தநிலையுள் , அதில் 30 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர்.காணாமல் போனவர்களை தேடும் பணியுள் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். மேலும் பல மக்கள் பாதுகாப்பு படையினரால் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

நேபாளத்தின் 25-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் மற்றும் 10 ஆயுரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் மழை வெள்ளத்தால் மற்றும் நிலச்சரிவால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக லலத்பூர், கவரே , கோடாங், போஜ்புர் மற்றும் மகன்பூர் போன்ற மாவட்டங்களில் தான் அதிகஅளவில் மக்கள் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். மக்கள் வீடுகளை விட்டு வெளியேறாத நிலை ஏற்பட்டுள்ளதால் அவர்களை மீட்கும் பணியில் மீட்பு படையினரும் , காவல்துறையினரும் ஈடுபட்டுள்ளனர்.

இவ்வாறு பாய்ந்து வரும் தொடர்மழையால் நீர்சார்ந்த நோய்கள் வயிற்றுப்போக்கு , டைபாய்டு ,ஹெப்பாடைட்டிஸ் ஏ, இ போன்ற நோய்கள் பரவ வாய்ப்பு அதிகம் என சுகாதார துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தொடர்மழையால் பாதிப்படைந்துள்ள அந்நட்டு மக்களை காப்பாற்றி அவர்களுக்கு முறையான சுகாதார சேவையை தர சர்வதேச அமைப்புகளின் உதவியை அந்நட்டு அரசு கோரியுள்ளது.

தற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)

தொடர்புடையவை

Close
Close