காஷ்மீரை கனமழையால் வெள்ளம் சூழ்ந்தது – 28 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நீலம் பள்ளத்தாக்கு என்ற இடத்தில் , கடந்த சில திணைகளாக பேய் மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மேலும் தாழ்வான இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. பல வீடுகளும் , மசூதிகளும் வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

மேக வெடிப்பு ஏற்பட்டதால் ஏற்பட்ட இந்த கனமழையால் 150-க்கும் மேற்பட்ட வீடுகள் அடித்து செல்லப்பட்டுள்ளது. மேலும் 12-க்கும் மேற்பட்டோரை காணவில்லை 28 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக லாஸ்வா என்ற பகுதி வெள்ளத்தால் கடுமையாக பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு பெய்துவரும் கனமழையால் மொபைல் மற்றும் இணையதள சேவையும் துண்டிக்கப்பட்டுள்ளது.

பல மக்கள் இந்த வெள்ளத்தில் சிக்கி இருப்பதால் அவர்களை மீட்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும் தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்களை நிவாரண முகாம்களில் தங்கப்பட்டுள்ளது.

தற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)

தொடர்புடையவை

Close
Close