தமிழகம் மற்றும் புதுவையில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதியில் பரவலாக நேற்று மழை பெய்தது , இந்நிலையில் இன்றும் நாளையும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் பல மாவட்டங்களில் வெயில் வாட்டிவதைத்த நிலையில் நேற்று தமிழகத்தின் தலைநகரான சென்னையில் மற்றும் மாவட்டத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. நேற்று 7.30 மணிக்கு தொடங்கிய மழையானது கனமழையாக மாறி சென்னையில் கொட்டி தீர்த்தது.

தமிழகத்தின் பல இடங்களில் மக்கள் தண்ணீர் தட்டுப்பாட்டால் தவித்து வந்த நிலையில் , நேற்று பெய்த இந்த மழையால் மக்கள் பெருமகிழ்ச்சி அடைந்த்துள்ளனர்.

இந்நிலையில் பருவமழை மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)

தொடர்புடையவை

Close
Close