ருசியான வெஜிடபிள் கட்லெட் செய்வது எப்படி?

ருசியான வெஜிடபிள் கட்லெட் எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாருங்கள்.

தேவையான பொருட்கள் :

உருளைக்கிழங்கு – 2
வெங்காயம் – 1
கேரட் – சிறியது ஒன்று
சீஸ் -6 க்யூப்ஸ்
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
கோஸ் துருவல் – 4 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் – கால் டீஸ்பூன்
பிரெட் தூள் -தேவையான அளவு

செய்முறை:

முதலில் உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி மசித்து எடுத்து கொள்ளவும்

பின்பு வெங்காயத்தை பொடியாக நறுக்கி எடுத்து கொள்ளவும்

அதன் பிறகு கேரட்டை துருவிக்கொள்ள வேண்டும்.

எண்ணை சட்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய வெங்காயம், மசித்த உருளைக்கிழங்கு, துருவிய கேரட், கோஸ், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு விழுது, கரம் மசாலாத் தூள், உப்பு சேர்த்து வதக்க வேண்டும்.

இந்த மசாலா ஆறியதும் அதனுடன் துருவிய சீஸ் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

இந்த மசாலாவை வட்டமாக தட்டி, பிரெட் தூளில் புரட்டி, சூடான தோசைக்கல்லில் போட்டு, இருபுறமும் எண்ணெய் விட்டு பொன்னிறமாக சுட்டு எடுக்க வேண்டும்.

இப்பொழுது சுவையான  வெஜிடபிள் கட்லெட் தயார்.

தற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)

தொடர்புடையவை

Close
Close