சீனாவில் சூறாவளி காற்று தாக்கியது – பலி எண்ணிக்கை 6-ஆக உயர்ந்தது, 200 பேர் படுகாயம்

சீனாவில் லியோனிங் என்ற மாகாணத்தில் உள்ள கையூவன் என்ற நகரில் நேற்று முன்தினம் மாலை திடீரென பயங்கர சூறாவளி காற்று தாக்கியது. இந்த காற்றானது மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் சுழற்றியடித்தது. வானுக்கும் பூமிக்கும் என விஸ்வரூபம் எடுத்த இந்த சூறாவெளியால் அங்கிருந்த வீடுகள் மற்றும் கட்டிடங்கள் பெரும் சேதம் அடைந்தன.

காற்றின் வேகம் மிக அதிகமாக இருந்ததால் வாகனங்கள், மரங்கள், மின்கம்பங்கள் என அனைத்தும் தூக்கி வீசப்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.

இத்தகைய பயங்கர சூறாவளியிள் சிக்கி இதுவரை 6 பேர் இறந்துள்ளதாகவும், 200க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மீட்புப்பணிகள் தீவிரமாக நடைபெற்றுக்கொண்டுள்ளது. சேதத்தின் அளவு குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை.

தற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)

தொடர்புடையவை

Close
Close