நிலவில் நீங்கள் தண்ணீரை கண்டுப்பிடித்தால் முதலில் எங்களுக்கு சொல்லுங்க -இஸ்ரோவுக்கு சென்னை மெட்ரோ வாட்டர் டிவிட்!

சந்திரயான் 2 விண்கலத்தை இஸ்ரோ வடிவமைத்து நேற்று வெற்றிகரமாக விண்ணில் நேற்று 2.43 மணிக்கு செலுத்தப்பட்டது. நிலவின் தென் பகுதியை ஆய்வு செய்ய ரூ.978 கோடி செலவில் சந்திரயான் உருவாக்கப்பட்டது. சந்திராயன்-2 விண்கலம் நிலவில் தண்ணீர், கனிம வளங்கள் உள்ளதா என்பதை ஆராய்வதற்காக செலுத்தப்பட்டுள்ளது.

சந்திராயன்-2 வெற்றிக்கரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பலர் இஸ்ரோவிற்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இஸ்ரோவுக்கு சென்னை மெட்ரோ வாட்டர் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளது.

அந்த பதிவில், இஸ்ரோவுக்கு வாழ்த்துகள். நாங்கள் புதிய நீர்நிலைகளை அதிகரிக்கும் பணியில் ஈடுப்பட்டுள்ளோம். ஒருவேளை நிலவில் நீங்கள் தண்ணீரை கண்டுப்பிடித்தால் முதலில் யாருக்கு தெரிவிக்க வேண்டும் என்று தெரியும்தானே? என கிண்டலாக பதிவிட்டுள்ளது.

தற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)

தொடர்புடையவை

Close
Close