கருணாநிதியின் நினைவிடத்தில்-திமுகவின் புதிய இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மரியாதை

திமுக கட்சியின் தலைவராக இருந்த கருணாநிதியின் மறைவுக்கு பிறகு இளைஞரணி செயலாளராக பொறுப்பு வகித்த மு.க. ஸ்டாலின் திமுக கட்சியின் தலைவராக பொறுப்பேற்று கொண்டார்.

பின் ஸ்டாலின் தலைமை வகித்த இளைஞரணி செயலாளர் பதவிக்கு கட்சியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்த உதயநிதி ஸ்டாலின் பரிந்துரை செய்யப்பட்டு பொறுப்பேற்றுக்கொண்டார்.

இந்நிலையில் திமுக கட்சியின் புதிய இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், திமுக தலைவர் ஸ்டாலின், துரைமுருகன், பொன்முடி உள்ளிட்டோர் சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

தற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)

தொடர்புடையவை

Close
Close