பவானிசாகர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரிப்பு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து கொண்டுள்ளது. ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான மேற்கு தொடர்ச்சி மலைகளிலும் மழை பெய்துவருவதால் அணையின் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

நேற்றைய நீர்வரத்து வினாடிக்கு 463 அடியாக இருந்தது , இன்று அந்த நீர்வரத்து வினாடிக்கு 1,988 அடியாக உயர்ந்துள்ளது.

தற்போது அணையில் 32.6 டி.எம்.சி தண்ணீர் இருப்பு உள்ளது.பவானிசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 2,200 கனஅடி நீர் பாசனத்திற்க்காக வெளியேற்றப்படுகிறது.

தற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)

தொடர்புடையவை

Close
Close