இந்தியாவில் செயற்கைகோள் எதிர்ப்பு ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது:பென்டகன் ஆதரவு

இந்தியா தற்போது ஏவுகணை மூலம் செயற்கைக்கோளை சுட்டு வீழ்த்தும் சோதனையை நடத்தியது.இந்த சோதனைக்கு அமெரிக்காவின் நாசா விமர்சனம் செய்தது. இச்சோதனையால் 400 சிதைவு பாகங்கள் உருவானதாகவும், இதனால் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ஆபத்து ஏற்படும் என்றும் கூறப்பட்டிருந்தது.

அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் இதனை மறுத்துள்ளது. சிதறி விழும் பாகங்களால் எந்த விளைவுகளும் ஏற்படாது என்றும் , அவை தானாக எரிந்து விடும் என்றும் அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர் பாட்ரிக் கடந்த மதம் 28-ம் தேதி தெரிவித்திருந்தார்.

தற்போது இதை அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகனும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)

தொடர்புடையவை

Close
Close