சர்வதேச ஹால் ஆஃப் பேம் கௌரவம் பெற்ற இந்திய ராணுவத்தளபதி!

இந்திய ராணுவத்தளபதி பிபின் ராவத் 5 நாள் அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். இரு நாடுகளின் ராணுவ உறவை மேம்படுத்தும் நோக்கில் அவர் பயணம் மேற்கொண்டுள்ளார்.

அமெரிக்க ராணுவப் பயிற்சிக் கல்லூரி மதிப்புமிக்க சர்வதேச அளவிலான கௌரவத்தை இந்திய ராணுவத்தளபதி பிபின் ராவத்துக்கு வழங்கி சிறப்பித்துள்ளது.

போஃர்ட் லீவன்வொர்த் நகரில் உள்ள அமெரிக்க ராணுவ பயிற்சிக் கல்லூரியில், அவருக்கு மதிப்புமிக்க சர்வதேச ஹால் ஆஃப் பேம் கௌரவம் வழங்கப்பட்டது. பிபின் ராவத் தான் விருது பெற்ற கல்லூரியின் முன்னாள் மாணவர் என்பதும், 1997-ஆம் ஆண்டு அங்கிருந்து பட்டம் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)

தொடர்புடையவை

Close
Close